அப்பா என்னை எங்கு கூப்பிட்டு போறீங்க! நம்பி வந்த சிறுமியை சீரழித்த கொடூரன் !! அடப்பாவமே !!

தமிழகத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள மூதாட்டி வீட்டில் வேலை பார்த்து வருகிறார். உடல்நலம் குன்றிய மூதாட்டியை கவனித்துக் கொள்வது தான் சிறுமியின் வேலையாக இருந்துள்ளது.

அப்போது மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி மீரான் (52) என்ற நபர் வந்து சென்றுள்ளார். மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள இவருக்கு பிள்ளைகள் உள்ளனர்.அடிக்கடி மூதாட்டியின் வீட்டிற்கு இவர் வந்து செல்வதால், அவரை சிறுமி அப்பா என்று தான் அழைப்பார். இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற மீரான், தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவளை நான் மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன், நீ உடனிருந்து அவளை கவனித்து கொள்ளும் படி என்று சிறுமியிடம் கூறியுள்ளார்.

அறிமுகமான நபர் என்பதால், அவர் சொன்னதை நம்பிய சிறுமி, மிரானுடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சிறுமியை எங்கு எங்கோ அழைத்துச் சென்ற அவர் ஒரு கட்டத்தில் பேருந்து ஒன்றில் சிறுமியை உட்கார் வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார்.
இதைக் கண்ட அந்த சிறுமி அப்பா என்னை எங்கு கூப்பிட்டு போறீங்க என்று கேட்க, உடனே மீரான் நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மறுப்பு தெரிவித்து கத்த முயற்சித்த போது, கத்தினால் கழுத்தறுத்து கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டி சிறுமியை திருச்சி மலைக்கோட்டைக்கு கடத்திச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். ஒரு கட்டத்தில் மீரான் வெளியே சென்ற பின் அங்கிருந்த செல் போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பெற்றோர் உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்க, சிறுமியை தொடர்பு கொண்ட பொலிசார் சிறுமியிடம் திருடன், திருடன் என கூச்சலிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று சிறுமியும் கூச்சலிட அப்பகுதி மக்கள் திரண்டு, மீரானை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற பொலிசார் சிறுமியை மீட்டு, மீரானை கைது செய்துள்ளனர்.

Leave a Comment